நீட் தேர்வுக்கான ஆடை கட்டுப்பாடுகள்

நீட் தேர்வுக்கான ஆடை கட்டுப்பாடுகள்



 



Dress Code For Neet





மருத்துவ சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாடு விதிகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வு கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வின்போது தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு முன்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மாணவர்களின் உடைகள் களையப்பட்டு கண்ணாடி, வாட்ச், பெல்ட், காலணிகள் அகற்றப்பட்டது. அதேபோல் மாணவிகள் அணிந்திருந்த கம்மல், செயின் போன்ற ஆபரணங்கள் அகற்றப்பட்டன. முழுக்கை சட்டைகள், அரைக்கை சட்டைகளாக வெட்டப்பட்டன. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. 


இந்த ஆண்டுக்கான நீட் தகுதி தேர்வு வருகிற மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணி மதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.


இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடு குறித்து சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, மாணவர்கள் வெளிர்நிற ஆடைகளை உடுத்தி வர வேண்டும். அரைக்கை வைத்தவையாக இருக்க வேண்டும். சல்வார் மற்றும் பேண்ட்டுகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ், பூக்கள் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது. ஷூ அணியக்கூடாது. ஹை ஹீல்ஸ் அணிந்து வரக்கூடாது. குறைந்த ஹீல் கொண்ட சிலிப்பர்கள், சாண்டல்கள் மட்டும் தான் அணிய வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்துக்கு கொண்டு வரக்கூடாது. ஜியோமெட்ரி, பென்சில், பாக்ஸ், கைப்பை, பெல்ட், தொப்பி, நகைகள், வாட்சு மற்றும் மெட்டாலிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது என்றும் சிபிஎஸ்இ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான உடை அணிந்து வரும் தேர்வர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்து அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NEET UG 2018 HALL TICKET DOWNLOAD செய்ய : >>>>>CLICK<<<<<


Source : dinakaran.com





Comments