கன்றுக்கு கடிதம்


"சுகப்பிரசவத்தில் பிறந்தாய். உன் தாய் "மா.... மா...." என்று  எப்போதும்போல் அல்லாமல் வித்தியாசமாக அழைத்து. காரணம் உன்மீதுள்ள அக்கறை.

நீ ஆணாக பிறந்தது  அவ்வளவு  சீக்கிரம் அறியப்பட்டது. உன்னைப் பெற்றெடுத்தவளைவிட மகிழ்ந்த அவளின் முகத்தில் ஏதோ ஓர் உணர்வு.



அந்த உணர்வு உன் அண்ணன்களை நியாபகப்படுத்தியது. பிறந்து இருமாதங்கள் கழித்தபின் விற்கப்பட்ட அவர்கள் இருக்கிறார்களா ? அல்லது மாமிசமானார்களா என்பதை நான் அறிய விரும்பவில்லை.

நீ வாழ வேண்டும், குட்டி கன்றே. உன்னைக் காளையாகக் கண்டு வீரம் வளர்க்க காத்திருக்கிறேன்."

இப்படிக்கு ,

உன் தாய் 'அம்மா' என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவளின் பேரன்.

@indrayainaiyam

Comments